News March 27, 2025
மாற்றுத்திறனாளிகளின் சலுகை பேருந்து பயண அட்டை காலம் நீட்டிப்பு

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

வேலூரில், 379 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
News April 17, 2025
மாடு விடும் விழாவில் 10 பேர் படுகாயம்

கே.வி.குப்பம் சோழமூர் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில், நேற்று (ஏப்ரல் 16) மாடு விடும் விழா நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பிட்ட இலக்கை விரைவாக அடைந்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
News April 17, 2025
பீகார் மாணவி பத்திரமாக மீட்பு

பாட்னாவைச் சேர்ந்த 17 வயது மாணவி தனது அண்ணனுடன் சண்டையிட்டு நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ரயில் ஏறி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அப்பெண்ணை, 2 பெண்கள் பத்திரமாக மீட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மொழி தெரியாமல் தவித்த மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினர்.