News April 3, 2024

மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

image

காமன்தொட்டிக்குட்பட்ட மாற்று காட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் தகவல் தொழில் நுட்பபிரிவு பிரசன்னா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.கே. அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Similar News

News April 28, 2025

கோர விபத்தில் ஓசூரை சேர்ந்த 5 பேர் பலி

image

ஓசூரை சேர்ந்த 7 பேர் காரில் திருப்பதிக்கு சென்றுள்ளனர். அப்போது பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருக்கும்போது முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நிலையில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

கிருஷ்ணகிரி வி.ஏ.ஓ. தூக்கிட்டுத் தற்கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி கவுண்டன் உரை சேர்ந்தவர் பூங்காவனம் (52). வி.மாதேப்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த இவர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் 14ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் தனது வீட்டருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 28, 2025

10th பாஸ் போதும்: ரூ.15000 சம்பளம்

image

கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ அக்ஷ்யம் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இப்பணிக்கு 18-35 வயத்துக்குட்பட்டவர்கள் பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாத சம்பளம் 15,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரியில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!