News October 6, 2025

மார்த்தாண்டம் அருக பைக் மோதி மூதாட்டி பலி

image

மார்த்தாண்டம் பாட்டவிளை சுகுமாரன் மனைவி சுகுமாரி (81) இன்று காலை மேல்புறம் வங்கிக்கு சென்று பென்ஷன் பணத்தை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து, பாகோடு மாவறத்தலவிளை அருகே செல்லும்போது எதிரில் வந்த பைக் மோதியது. இதில் சுகுமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த அருமனை முரம்புவிளை பிரவின்ராஜ் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

Similar News

News December 11, 2025

குமரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

SI தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

image

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நாகர்கோவில் TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு மாவட்ட அளவிலான இலவச முழு மாதிரித்தேர்வு வரும் செவ்வாய்க்கிழமை (16.12.2025 ) நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

குமரி: சிறுமியிடம் அத்துமீறிய எலக்ட்ரீஷியன் கைது

image

கருங்கல்-மாங்கரை எலக்ட்ரீஷியன் பால்ராஜ் (57) மனைவி வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தி வந்தார். 2 நாட்களுக்கு முன் இரவு  டியூஷனுக்கு வந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்துச்செல்ல பெற்றோர் வராததால் பால்ராஜ் சிறுமியை வீட்டுக்கு கொண்டு விடச்செல்லும் வழியில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்தார். நேற்று குளச்சல் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.

error: Content is protected !!