News March 28, 2025
மார்ச்.31 வரை காமராஜர் பல்கலையில் மாணவர் சேர்க்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்கம் பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலில் 21 இளங்கலை பட்டப் படிப்புகள்,20 முதுகலை பட்டப் படிப்புகள் மார்ச் 31 வரை நடக்கின்றன. இதன் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக கல்வியின் இணையதள வழியாக நடைபெறுகிறது.சேர விரும்பும் மாணவர்கள் https://mkuniversityadmission.samarth.edu.in/ என்ற பல்கலைக்கழக இணைய நல முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 10, 2025
மதுரையில் நாளை (டிச.11) மின்தடை அறிவிப்பு

மதுரையில் நாளை (டிச.11) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர்காலனி, கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமி நகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், தபால் தந்திநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், குடிநீர் வாரிய காலனி, சண்முகா நகர், மீனாட்சி நகர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
மதுரை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ரூ.1 கோடி சவால்

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கார்த்திகை தீபத்தூனை சர்வே கல் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டால் கோவை பிரதர் சார்பாக ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு சவால் விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் துரை சரவணன் சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 10, 2025
மதுரையில் வக்கீல் சேவை இலவசம்! தெரிஞ்சிக்கோங்க…

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452-2535067
2.உயர்நீதிமன்றம் மதுரை கிளை: 0452-2433756
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


