News April 18, 2025
மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றி பார்க்கலாம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் மற்றும் புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 18) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 22, 2025
மெரினா கடற்கரையில் நீதிபதிகள் ஆய்வு

மொரினாவுக்கு “நீலக்கொடி” சான்றிதழ் வழங்குவது தொடர்பாக இன்று மெரினாவில் ஆய்வு செய்தனர். அப்போது பிரச்னையில்லையெனில் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், மாநில அரசு நீலக்கொடி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மெரினா கடற்கரையிலேயே நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்
News December 22, 2025
சென்னை: எமனாக மாறிய பொது கழிப்பறை!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கழிப்பறைக்கு அதேப்பகுதியை சேர்ந்த குடிநீர் வாரிய ஊழியர் முருகன் (58) நேற்று சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சைதாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 22, 2025
சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து புதிய அப்டேட்

சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். இந்த 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 21 வரை 14 நாட்கள் நடைபெறும். வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டும் காலை நேரங்களில் நடைபெறும் கண்காட்சி, இந்த முறை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என பபாசி தெரிவித்துள்ளது.


