News August 14, 2024
மாமனாருக்கு அரிவாள் வெட்டு

ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை 2002ல் திருமணம் செய்துகொண்டார். சுரேஷூக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால், மன வேதனையடைந்த லதா கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், லதாவை சமாதானப்படுத்த வந்த சுரேஷ் நேற்று மாமனார் ஆரோக்கியத்தை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
Similar News
News January 8, 2026
அரியலூர்: 614 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டம் விதிமீறல் குற்றத்திற்காக 2,38,165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 4384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாகவும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் 614 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
News January 8, 2026
அரியலூர்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

அரியலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
அரியலூர்: பொங்கல் விழா குறித்து ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது “சமத்துவ சுகாதார பொங்கல் விழா” ஜன.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


