News March 30, 2025
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை செவென் ஹில்ஸ் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் சனிக்கிழமை 5.4.2025 அன்று காலை 9 மணி முதல் 2.30 மணி வரை காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைக்கிறார்.
Similar News
News April 5, 2025
மீன் குஞ்சு வளர்க்க மாவட்ட ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத்தல், கொல்லைப்புற அலங்கார மீன் வளர்ப்பு நிலையம், சிறிய அளவிலான பயோ பிளாக் மீன் வளர்ப்பு குளங்கள் அமைக்க ஆதிதிராவிடர் பிரிவினர் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் 5/3 யூனியன் வங்கி மாடியில் பெருமாள் கோவில் தெரு சிவகங்கை 04575 -240848 என்ற எண்ணில் விண்ணப்பித்து பயன்பெற ஆட்சியர் தகவல்.
News April 5, 2025
இலங்கைக்கு கஞ்சா கடத்தல்? – மூவர் கைது

திருச்சி-ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கௌதம்-க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடியைச் சேர்ந்த மகாராஜன் உள்ளிட்ட மூவர் ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி கடத்தி சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 5, 2025
சிவகங்கையில் ரூ.25 ஆயிரத்தில் வேலை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை மேலாளார் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 25 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். <