News August 25, 2024
மானியத்தில் மின்சார மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த விவசாயிகள், மானியத்துடனான மின்சார மோட்டாா் பம்ப் செட்டுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா். 3 ஏக்கா் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பழைய மின் மோட்டாா் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது வாங்குவதற்கும் மானியமாக ரூ.15,000அல்லது மொத்த விலையில் 50% மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
Similar News
News November 12, 2025
அரியலூர்: 15 ஆம் தேதியே இதற்கு கடைசி நாள்!

அரியலூர், இயற்கை சீற்றங்களால் நெல்லில் மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ள அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வரும் 15-ம் தேதிக்குள் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தொடக்கக் கூட்டுறவு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
அரியலூர்: வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக பிரிவு காவல்துறையினரால் மது குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 28 இருசக்கர வாகனங்கள், அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில், நாளை (நவ.13) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஏலம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளனர்.
News November 12, 2025
பொன்பரப்பி: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (11.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.


