News October 23, 2024

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற நெல்லை வீரர்

image

நெல்லை மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பாளை மு.ந. அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி மாணவர் யஷ்வந்த்ராஜ் 3000 மீட்டர், மற்றும் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு மற்றும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் பரிசு வென்றுள்ளார். மேலும் தனிநபர் சாம்பியன் விருதும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்ற இவரை சபாநாயகர் அப்பாவு இன்று (அக்.22) பாராட்டினார்.

Similar News

News September 18, 2025

மனநல நிறுவனங்கள் மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; விரைவில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மையங்கள் ஆகியவை முறையாக பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து நிறுவனங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய உத்தரவு.

News September 18, 2025

நெல்லையில் 186 புதிய வாக்கு சாவடிகள்

image

நெல்லை மாவட்டத்தில் 1,490 வாக்குச்சாவடிகளில் 375 பிரிக்கப்பட்டு, 186 புதியவை சேர்க்கப்பட்டு மொத்தம் 1,676 ஆக உயர்கிறது. 189 வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும். 26 இடங்கள் மாற்றம், 10 பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றியமைப்பு, 6 பள்ளிகளின் பெயர் மாற்றம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கருத்துகள், ஆட்சேபனைகளை ஒரு வாரத்தில் வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம் என கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டார் .

News September 18, 2025

நெல்லை: ரயில் நிலையத்தில் கொலை

image

நெல்லை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு பயணிகள் 3 பேரை வாலிபர் தாக்கியதில் கோவை முதியவர் தங்கப்பன் உயிரிழந்தார். மற்ற இருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ் 25 என்பவரை போலீசார் விசாரிக்கின்றனர். அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் விழிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக என சந்தேகிக்கின்றனர்.

error: Content is protected !!