News April 19, 2025

மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று அறிவித்துள்ளார். மேலும் விண்ணப்ப படிவங்களை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மே 3ம் தேதிக்குள் விளையாட்டு ஆணைய இணையத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளது. SHARE செய்ங்க

Similar News

News October 31, 2025

திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

image

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <>parivahan.gov.in <<>> என்ற இணையத்தில் Drivers/Learners Licence-க்குள் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் டூப்ளிகேட் லைசன்ஸ் வீடு தேடி வந்து விடும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 31, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்த வேன் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவரை, முன்விரோதம் காரணமாக முத்துப்பாண்டி என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டவே, குற்றவாளி முத்துபாண்டிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார்,

News October 31, 2025

திருச்சி மாவட்டம் சாதனை!

image

திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறையினர், கல்லுாரிக்கனவு உள்ளிட்ட திட்டங்கள் மூலமான எடுத்த தொடர் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் கல்வியாண்டில், பிளஸ் 2 முடித்த 11,064 அரசு பள்ளி மாணவர்களில், 10,864 பேர் (98 சதவீதம்) உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம், திருச்சி மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!