News April 13, 2025
மாநில அளவில் 38வது இடம் பிடித்த கோவை மாணவி

தேசிய திறனாய்வு தேர்வு அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.28ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 27 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் இனிவரும் 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை பெற உள்ளனர். இதில் மாணவி வர்ஷா மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநிலத்தில் 38வது இடத்தையும் பிடித்து சாதித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
கோவை அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு!

கோவை, சிறுமுகை ஆலாங்கொம்பை சேர்ந்தவர் முருகேசன். இவர் நேற்று மாலை தனது மனைவி ஜோதிமணியுடன், பைக்கில் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார். அப்போது, தாலுகா அலுவலகம் அருகே சென்ற போது, வேகத்தடையில் பைக் நிலை தடுமாறியதில், ஜோதிமணி தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதிமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 18, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (17.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 18, 2025
அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.