News August 24, 2024

மாநிலத்தில் சிறந்த பள்ளி விருது

image

அரசு பள்ளியில் உயர் கல்விக்கு செல்லும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வியுடன் நீட், ஜெ.இஇ மற்றும் பிற உயர்கல்வி நுழைவு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரி பள்ளி வீதம் மாநில அளவில் 40 பள்ளிகள் செயல்படுகிறது. இதில் சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் விருது அறிவிக்கப்பட்டன.இதில் இந்தாண்டுக்கான விருதை கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளி பெற்றது.

Similar News

News July 6, 2025

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஸ்தல வரலாறு

image

முன்னொரு காலத்தில் கண்டதேவி அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் வறட்சி மிகுந்த நிலையில் விவசாயம் இல்லாமல் பஞ்சத்தில் இருந்தது. எனவே இப்பகுதி மக்கள் இக்கோயில் உள்ள இடத்தில் கூடி பிரார்த்திக்க பொன் பொழிந்தது. பொன்னுக்கு மற்றொரு சொல் சொர்ணம். எனவே இக்கோவிலில் உள்ள சுவாமி சொர்ணமூர்த்தி என அழைக்கப்பட்டார் என்பது வரலாறு. இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.

News July 6, 2025

சிவகங்கை இரவு ரோந்து பணி விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (05.07.25) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் சார்பாக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை சேர்ந்த அதிகாரிகளின் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது 100 டயல் செய்யலாம். அவசர காலத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

News July 5, 2025

குழந்தை தொழிலாளர் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் எவரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் Pencil Portal https://pencil.gov.in முகவரியிலோ 04575-240521 அல்லது Child Help line 1098 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!