News April 22, 2025
மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
Similar News
News November 27, 2025
தூத்துக்குடி: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News November 27, 2025
தூத்துக்குடி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 27, 2025
தூத்துக்குடி: இரட்டை கொலையில் குற்றவாளி பிடிபட்டார்

கயத்தாறு அருகே தளவாய்புரத்தில் மதுபான கூடத்தில் அண்மையில் முருகன் மற்றும் மந்திரம் ஆகிய இருவரையும் அவரது உறவினர் கோமு என்பவர் அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்தார். அவரை செட்டிக்குறிச்சி காட்டுப்பகுதியில் வைத்து தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர்.


