News March 10, 2025
மாநகராட்சி ஆணையர் நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என பா.ம.க. மாநில தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News March 10, 2025
சேலத்தில் பீர் விற்பனை 40% அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் 100 பாரன்ஹீட் வெப்பம் வெயில் சுட்டெரித்து வருகிறது கடந்த சில நாட்களாக விஸ்கி பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது டாஸ்மார்க் விற்பனையாளர் கூறுகையில் 200 டாஸ்மார்க் கடைகள் நாள் ஒன்றுக்கு மூன்று கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை நடக்கிறது தற்போது வெயிலின் தாக்கத்தால் உயிர் விற்பனை 40 சதவீதம் கூடியுள்ளது என தெரிவித்தார்
News March 10, 2025
கோடைக்கால அட்டவணையை வெளியிட்ட சேலம் விமான நிலையம்

சேலம் காமலாபுரத்தில் இருந்து சென்னை, கொச்சின், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், கோடைக்கால பயண நேர அட்டவணையை சேலம் விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வரும் மார்ச் 30 முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வருகிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ், அலையன்ஸ் ஏர் விமான நிறுவனங்கள் விமான சேவையை வழங்கி வருகின்றனர்.
News March 10, 2025
சேலம் வந்த பிரபல இயக்குனர்

சேலம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலில் இன்று (மார்ச்.10) பா.ம.க. பிரமுகர் தமிழ்செல்வன்- சந்திரலேகா ஜோடி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் பா.ம.க. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.