News April 10, 2025
மாநகராட்சியில் வேலை: நாளை கடைசி நாள்

சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
Similar News
News November 22, 2025
ஸ்ரீபெரும்புதூரில் நாளை விஜய் நிகழ்ச்சி?

காஞ்சிபுரத்தில் உள்ள, காஞ்சி, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட 3 தொகுதிக்குட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளின் குடும்பத்தை சேர்ந்த 2,000 பேரை நாளை விஜய் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்வு, ஸ்ரீபெரும்புதுார் அருகே, குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. நேற்று இந்த நிகழ்வுக்கு அனுமதி கேட்டு, SP & சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
News November 22, 2025
காஞ்சி: தொடரும் கஞ்சா அவலம்… அதிரடி காட்டிய போலீஸ்!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் உப்புகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்த போலீசார், விஷ்வா, சூர்யா ஆகிய இருவரையும் நேற்று (நவ.22) விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News November 22, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு நேர ரோந்துபணி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்


