News March 25, 2025
மாநகராட்சியாக உருவெடுக்கும் பெரம்பலூர்

தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் கே என் நேரு பெரம்பலூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், நகராட்சிகளின் எண்ணிக்கையையும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
Similar News
News October 19, 2025
பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயலில் வேலை செய்யும் விவசாயிகள் இடி, மின்னல், மழை நேரங்களில் வயலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி எச்சரித்துள்ளார்.
News October 19, 2025
பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வருகிற அக்.24ம் ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன விற்பானி அலுவலகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெரம்பலூர்: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!