News April 11, 2025
மாணவி தனிமைப்படுத்திய விவகாரத்தில் கைது நடவடிக்கை தேவை

பொள்ளாச்சி அருகே மாதவிடாய் காரணமாக மாணவியை வகுப்புக்கு வெளியே தேர்வெழுத வைத்து தனிமைப்படுத்திய விவகாரத்தில் பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி, உதவியாளர் சாந்தி ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக மாநில பொருளாளர் சிவகாசி திலகபாமா வலியுறுத்தியுள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
News December 3, 2025
விருதுநகர்: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
விருதுநகர்: குழந்தை தத்தெடுத்து வளர்க்க அழைப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் மூலமாக குழந்தை இல்லாத தம்பதியர் சட்டப்படி பதிவு செய்து குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம். குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ளவர்கள் https://missionvatsalya.wcd.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை ( 04562 – 293946) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


