News April 21, 2025
மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 5, 2025
பத்திரபதிவு அலுவலகத்தில் கூடுதல் டோக்கங்கள்

செங்கல்பட்டில் ஜூலை 7 அன்று சுப முகூர்த்த தினம் என்பதால், பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் அதிகரிக்கப்படும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார். அன்று ஒரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு 100-ல் இருந்து 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-ல் இருந்து 300 டோக்கன்களும் வழங்கப்படும். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பதிவு செய்ய முடியும்.
News July 5, 2025
செங்கல்பட்டில் 72 வி.ஏ.ஓ.க்கள் அதிரடி பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 72 வி.ஏ.ஓக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில் உள்ள,கிராம நிர்வாக அலுவலர்கள் பணி மாற்றம் செய்து சப்- கலெக்டர் மாலதி எலன் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாவை சேர்ந்த கிராம அலுவலர்கள்,பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News July 5, 2025
திருமணத் தடை நீக்கும் காளத்தீஸ்வரர்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது வல்லம் காளத்தீஸ்வரர் கோயில். இது சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட குடவரைக் கோயில். ராகுவும், கேதுவும் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரை வழிபட்ட பிறகு, இங்கு ஒரு இரவு தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். ராகு-கேது தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடைகள் நீங்க இங்குள்ள காளத்தீஸ்வரரையும், ஞானாம்பிகை அம்மனையும் வணங்கி வேண்டிக்கொள்வது வழக்கம். ஷேர் பண்ணுங்க