News April 21, 2025
மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 21, 2025
செங்கல்பட்டில் மழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூருக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.20) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
செங்கல்பட்டு காவல்துறை தீபாவளி வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை செங்கல்பட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்கவும். மேலும் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டாம். மேலும் இந்த தீபாவளி அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளியாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவித்துள்ளது.