News May 17, 2024
மாணவிக்கு உடனடி மின் இணைப்பு வசதி

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி பத்தாம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் உதவியோடு உடனடியாக மின் இணைப்பு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
Similar News
News September 18, 2025
திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நாளை (செப்.18) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்து தீர்வு காணலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
திருவாரூரில் கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.