News January 22, 2025
மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.
Similar News
News November 6, 2025
புதுச்சேரி: 10th போதும்..அரசு வேலை!

புதுச்சேரி மக்களே, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 69 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது, சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.1,77,500 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30-11-2025 தேதிக்குள் <
News November 6, 2025
புதுவை: மர்மமான முறையில் கூலி தொழிலாளி இறப்பு

பாகூர் அடுத்த பெரிய ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் முத்து, சுமை தூக்கும் தொழிலாளியான இவர் நேற்று அதிகாலை 2:30 மணியளவில், வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். பின், பெரிய ஆராய்ச்சி குப்பதில் சாலையோரமாக மாடுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்தில், தலையில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து எவ்வாறு இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
News November 6, 2025
புதுவை ஜிப்மெரில் பிரெஞ்சு-இந்தியா கூட்டு கல்வி திட்டம்

புதுவை ஜிப்மரில் தாவரங்கள், AI மூலம் மருத்துவ கல்வி ஆராய்சிக்கான இந்திய, பிரெஞ்சு கூட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா, பிரான்சை சேர்ந்த தலா 4 கல்வி நிறுவனங்கள், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கல்வியை பரிமாறுகின்றன. இத்திட்டத்தை புதுவை பிரெஞ்சு தூதர் எட்டியென் ஹாலண்ட், பிரெஞ்சு ஒருங்கிணைப்பாளர் அன்டோயின் நில்லேமெட், ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


