News November 19, 2024

மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இன மாணவர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 19, 2024

நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை

image

சென்னை முகாம் அலுவலகத்தில், இன்று நவம்பர் 19, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹுசைன் சாஹிப் இடம் வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் நாகூர் தர்கா நிர்வாக உறுப்பினர்கள் இருந்தனர்.

News November 19, 2024

இ – சேவை மையங்களில் சான்று கட்டணம் நிர்ணயம்

image

இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News November 19, 2024

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; ஆட்சியர் தகவல்

image

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.11.2024 காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஐடிஐ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்துக்கொள்ளலாம் என்று ஆட்சியர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.