News November 15, 2024
மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2024 -2025 கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
Similar News
News November 19, 2024
தேனியில் 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் நவ.1 ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தற்போது 130 கிராம ஊராட்சிகளில் வருகின்ற நவ.23ஆம் தேதி ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
தேனி: பெண்கள் சுயதொழில் துவங்க 50,000 மானியம்
தேனி மாவட்ட சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்வதற்கு ரூ.50,000 வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் https://theni.nic.in என்ற இணையதளம் மூலம் டிச.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன்கடை காலி பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு
தேனி மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள 41 விற்பனையாளர் மற்றும் 08 கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நேரடி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற தகுதியானவர்கள் https://drbtheni.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04546-291 929 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்துள்ளார். *பகிரவும்*