News September 14, 2024
மாணவர்களை “பூஸ்ட்” செய்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.
Similar News
News October 30, 2025
திருச்சி: திருமணமான 3 மாதத்தில் தற்கொலை

சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கீழக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த ஹரிணி ஆகியோருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஹரிணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News October 30, 2025
திருச்சி: கோயிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

திருச்சி, பச்சைபெருமாள்பட்டியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் நேற்றுமுன்தினம் புளியஞ்சோலை மாசி பெரியண்ணசாமி கோயிலுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் தேடிச்சென்ற போது புளியஞ்சோலை அருகே உள்ள ஆற்றில் அவர் சடலமாக கிடந்தார். உடல் துறையூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News October 30, 2025
திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் வரும் நவ.1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


