News April 3, 2025
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News November 11, 2025
திருச்சி மக்களே, முற்றிலும் இலவசம்!

தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள் மற்றும் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை & கீரை அடங்கிய விதை தொகுப்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசாக வழங்கப்படுகிறது. இதனை பெற விரும்புவோர்,<
News November 11, 2025
வேலைவாய்ப்பு: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் புதிதாக யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு பயிற்சி அளிக்க யோகா பிரிவில் பட்டம் பெற்ற யோகா பயிற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை நாளை ந்வ.12ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 11, 2025
திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு

திருச்சியில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்- I வரும் 15 ஆம் தேதி 14 தேர்வு மையங்களிலும், தாள் – II வரும் 16 ஆம் தேதி 51 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. இதில், தாள் I – 3946 பேரும், தாள் II – 15,286 பேரும் எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வு மையங்கள் பறக்கும் படையினர் மூலம் கண்காணிக்கப்படும். நுழைவு சீட்டு மற்றும் விவரங்களுக்கு 18004256753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


