News August 2, 2024
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம். புதுச்சேரி பிராந்திய அளவில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.15,000 மற்றும் ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடப்பிரிவு வாரியாக 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்க ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
Similar News
News November 27, 2025
புதுவை: ரூ.650 கோடியில் சாலை மேம்பாலம் பணிகள்!

புதுவையில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், இந்திராகாந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை இடையே மேம்பாலம், இந்திராகாந்தி சிலையிலிருந்து அரியாங்குப்பம் வரை 2.6 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை 13.4 கி.மீ. வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
News November 27, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவ.29 மற்றும் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.
News November 27, 2025
புதுச்சேரிக்கு நாளை முதல் ஆரஞ்சு அலர்ட்

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்திய அறிக்கையின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வரும் 28ம் தேதி முதல் 1ம் தேதி வரை புயலாக மாறக்கூடும். இதனால் புதுச்சேரிக்கு மிக கன மற்றும் அதி தீவிர மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.


