News November 9, 2024

மாணவர்களின் கல்வி நலனே முக்கியம் – திருவாரூர் கலெக்டர்

image

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் கல்வி நலனே முக்கியம். 5 ஆம் வகுப்பு முடித்து செல்லும் அனைத்து மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் எழுதுதல், வாசித்தல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார். இவற்றை பார்வை அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும் என்றார்.

Similar News

News December 7, 2025

திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

image

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2025

திருவாரூர்: புதிய மருத்துவ இணை இயக்குனர் பதவியேற்பு

image

திருவாரூர் மாவட்டத்தின் மருத்துவ இணை இயக்குனர் பணியில் மருத்துவர் S.சுரேஷ்குமார் என்பவர் நேற்று (டிச.06) புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட மருத்துவ அணி சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேற்று புதிதாக பதவியேற்ற மருத்துவ இணை இயக்குனர் சுரேஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

News December 7, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.6) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!