News November 6, 2024
மாணவருக்கு வெட்டு: 9 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு!
நெல்லை மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார்(18) என்ற பாலிடெக்னிக் மாணவர் நேற்று வீடு புகுந்து அருவாளால் வெட்டப்பட்டார். இது குறித்து பாளை., தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வரும் நிலையில், 9 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்தார். தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்ய விரைந்துள்ளதாக கூறினார்.
Similar News
News November 20, 2024
நெல்லையில் மழை தொடரும்!
நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளதால் பாதுகாப்பாக இருக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 19, 2024
நெல்லை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் அடிஉரம் மற்றும் பிற உரங்கள் பெற அடங்கல் சான்று கட்டாயம் என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உரங்கள் பெற ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் வேளாண்மை துறை அலுவலர்களை 04622572514 என்ற தொலைபேசி எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர்(பொ) கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.