News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News November 20, 2025

நாமக்கல் : PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News November 20, 2025

நாமக்கல்; கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (20-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் அதே விலையில் நீடிக்கின்றது.

News November 20, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு பெறலாம். மேலும் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!