News April 21, 2024
மாட்டு வண்டிக்கார ர் அடித்து கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் மாதா கோயில் பகுதியில் சேர்ந்த அருண்ராஜ்(41 ) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தயாளன், சங்கர் ,ரமேஷ் உள்ளிட்டோருக்கு இடையே முன்விரோதம் இருந்து கட்டையால் தலையில் தாக்கியதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு லால்குடி போலீசார் விசாரணை
Similar News
News April 20, 2025
TNPSC குரூப் 4 மாதிரி தேர்வு-ரொக்கப் பரிசு அறிவிப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், ரோட்டரி கிளப் சார்பில், TNPSC குருப் 4 போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு 21.04.2025 காலை 10 முதல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 5 பேருக்கு முதல் பரிசாக ரூ.1000, 2ம் பரிசாக ரூ.750, 3ம் பரிசாக தலா ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை SHARE செய்ங்க…
News April 20, 2025
குறுக்கே வந்த தள்ளுவண்டி – மெக்கானிக் பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது வடக்கு இடையபட்டி என்ற இடத்தில் தண்ணீர் பிடித்து சென்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 19, 2025
திருச்சி: கோடை கால சுற்றுலா செல்ல சூப்பர் இடம்!

திருச்சியில் அடிக்கிற வெயிலுக்கு இதமா எங்கயாச்சும் போய்ட்டு வந்தா நல்லா இருக்கும் என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்க. திருச்சிக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பச்சமலை, ஒரு பசுமையான மலைத்தொடராகும். நீர்வீழ்ச்சிகள், பசுமையான தோட்டங்கள் என பச்சை மலைக்கு ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. திருச்சியில் இருந்து ஒரே நாளில் கிளம்பி சுற்றிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப இது சூப்பர் இடமாகும். SHARE!