News August 27, 2024
மாடு மோதியதில் பைக்கில் சென்ற பெண் உயிரிழப்பு

தென்காசி அடுத்த மேலகரம் சிந்தாமணியை சேர்ந்தவர் இசக்கி மனைவி சுப்புலட்சுமி (75). நேற்று திரவிய நகர் பகுதியில் வயல் வேலைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவருடன் பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே மாடு மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். பின்னர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 7, 2025
குற்றாலம் டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தென்காசி மாவட்டம், குற்றாலம் சாலையில் வல்லம் சிலுவை முக்கு பகுதியில் காசி மேஜர்புரம் பகுதியை சார்ந்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது வல்லத்திலிருந்து சிலுவை முக்கு நோக்கிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. கடுமையான வேகத்தில் சென்ற மணிகண்டன் தூக்கி வீசப்பட்டு தடுப்பு சுவரில் மோதி பரிதாபமாக பலியானார். குற்றாலம் போலீசார் விசாரணை.
News November 7, 2025
தென்காசி முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று ரேணுகா பதவியேற்றுக் கொண்டார் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 7, 2025
தென்காசி: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

தென்காசி மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.


