News May 15, 2024
மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் சின்னத்துரை என்பவர் புதிதாக கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றி ரபிக் இஸ்லாம் (35) மதுபோதையில் 2-வது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்டு மனு

திருவள்ளூரில் செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை திருவள்ளூர் அனைத்து மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று மனு அளித்தனர். வரும் 27ஆம் தேதி திருவள்ளூரில் ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 16, 2025
திருவள்ளூர்: MCA,M.Sc,BE/ B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு 127 காலிப்பணியிடங்கள் உள்ளது. சம்பளமாக ரூ.1,05,280 வரை வழங்கப்படும். மேனேஜர்(25-35 வயது) 2-3 ஆண்டுகள் அனுபவம் தேவை. சீனியர் மேனேஜர்(30-40 வயது) 3-5 ஆண்டுகள் அனுபவம் தேவை. MCA,M.Sc(CS), BE/ B.Tech(CIVIL,MECH,ECE,EEE) படித்தவர்கள் இந்த <
News September 16, 2025
திருவள்ளூர்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.