News October 23, 2024
மழை நேர மின் பாதிப்பா?உடனே இதை செய்யுங்க!

மதுரையில் வடகிழக்கு பருவமழையில் மின்தடை, மின்பாதையில் மரம் விழுவது, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது நிகழ்ந்தால் உடனே சரிசெய்ய 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாபுரம் காலனி- 94458 52932, அண்ணா நகர்-94458 52850, உத்தங்குடி- 94458 52851, பனங்காடி- 94458 52855, அழகர்நகர்- 94458 52847, சிந்தாமணி- 94458 52939, திருநகர்- 94458 52957 ஆகிய அலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
Similar News
News November 28, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விபரீத முடிவு

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் மகபூப்பாட்சா மகள் ஹமீதாபானு(20). இவர் தெற்காவணி மூலவீதியில் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லமல் இருக்க பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் இன்று பெட்ரூமில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை டூ திருவண்ணாமலை 265 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மதுரை மண்டல போக்கு வரத்து கழகத்தின் சார்பில் 265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் வருகிற 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
https://www.tnstc.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.