News May 17, 2024

மழை சீசன்: கவனமாக பஸ்களை இயக்க அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன் தினம் (மே 15) இரவு வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் தேங்கிய மழை நீரை அரசு பஸ் ஒன்று சிக்கியது. இந்த நிலையில் தரைப்பாலம், சுரங்க பாலம், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கினால் மாற்றுப்பாதையில் பஸ்களை இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு எஸ்இடிசி அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News November 22, 2025

நெல்லை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி.!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு க்ளிக் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.

News November 22, 2025

நெல்லையில் கனமழை தொடரும்.!

image

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 22, 2025

நெல்லை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

image

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!