News April 5, 2025

மழையூர் டாஸ்மார்க் அருகே வாலிபர் வெட்டிக் கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ் (20) என்ற வாலிபர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மழையூரில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து மழையூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Similar News

News April 6, 2025

குழந்தை பாக்கியம் அருளும் நார்த்தமலை முத்துமாரியம்மன்

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் இந்த முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாரதர் இந்த மலையில் வந்து தங்கியதால் இதற்கு நாரதர்மலை என அழைக்கப்பட்டு பின்னர் நார்த்தமலை என்றானது. இங்குள்ள முத்துமாரியம்மனை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் மற்றும் அக்னி கரகம் எடுத்து வழிபட்டால் தீரா நோயும் தீரும் என்பது ஐதீகம்.

News April 6, 2025

குவாரி குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதாரண கற்கள், மண், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் இதர கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் பெற வரும் 7ஆம் தேதி (நாளை) முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா அவர்கள் தெரிவித்துள்ளார். இதை விண்ணப்பதாரர்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணையத்தள முகவரி மூலம் விண்ணப்பம் செய்யலாம்.

News April 6, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் வரை கடனுதவி

image

புதுகை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணை, ஆட்டுப் பண்ணை, பன்றி வளர்ப்பு பண்ணை ஆகியவற்றை அமைக்க ரூ.10 முதல் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் வைக்கோல், ஊறுகாய்ப்புல், தீவன சேமிப்பு வசதி பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!