News May 17, 2024

மழைநீர் தேங்கும் பகுதிகளில் ஆணையர் ஆய்வு

image

குமரி மாவட்டத்தில் இன்று முதல் நாளை மறுநாள் வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் தாழ்வான மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகரில் மழைநீர் தேங்கும் பகுதிகளான கம்பளம், மீனாட்சி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று(மே 16) மாநகர ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.

Similar News

News November 19, 2025

கன்னியாகுமரி: எங்கெல்லாம் மின்தடை? முன்பே அறியலாம்!

image

குமரி முழுவதும் எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. இந்த <>LINK <<>> பக்கத்திற்குச் சென்று CIRCLE பகுதியில் எந்த மாவட்டம் என்பதை தேர்ந்தெடுத்து கேப்சாவை உள்ளிட்டால் முழு விவரமும் உங்களுக்கு திரையில் தோன்றும். இதன் மூலம் எப்போது மின்தடை ஏற்படும் என்பது குறித்து நீங்கள் அறியலாம். SHARE

News November 19, 2025

குமரி: முடி உதிர்வு காரணமாக பெண் எடுத்த முடிவு

image

தென்தாமரை குளம் கீழச்சாலை ஐஸ்வர்யா(27) பட்டதாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலை முடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். “தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல்” என அடிக்கடி புலம்பி உள்ளார். நவ.17-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 19, 2025

குமரி: பணி நெருக்கடி – ஊழியர் தற்கொலை முயற்சி

image

குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்த்(30)க்கு ஆணையாளர் சுபிதாஸ்ரீ சில நாட்களாக அதிக பணிச்சுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்து நேற்று சென்ற ஆனந்த் குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். மயங்கிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!