News August 6, 2024
மலையேற்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (35), மலையேற்ற வீராங்கனையான இவர் இதுவரை ஐந்து கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக நவம்பர் மாதம் மற்றொரு சிகரத்தில் ஏற இருக்கிறார். அவருக்கு செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் இன்று ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News July 8, 2025
உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
News July 8, 2025
ECRல் மறைந்திருக்கும் ஆலம்பரைக்கோட்டை

கிழக்கு கடற்கரையோரம் காலனி காலம் வரை பல புகழ் பெற்ற கோட்டைகள் இருந்தன. அதில் ஒன்று தான் செங்கல்பட்டு செய்யூர் ஆலம்பரைக்கோட்டை. நவாப், பிரெஞ்சு, ஆங்கிலேயர்கள் நிர்வகித்த இந்த கோட்டை அப்போது முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. இந்தக் கோட்டையின் நடுவில் இஸ்லாமியத் துறவி ஒருவரின் கல்லறையும் உள்ளது. முன்னொருகாலத்தில் முக்கிய வணிக மையமாக பரபரப்போடு இருந்த இந்த கோட்டை இன்று அமைதியாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 8, 2025
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு

தமிழக அரசு “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தங்கள் சுயவிவரங்களை வெளியிடாமல் தெரிவிக்கலாம். மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்கள் குறித்து புகார் அளிக்க 10581 என்ற அமலாக்கப்பிரிவு உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.