News August 6, 2024

மலையேற்ற வீராங்கனைக்கு ஊக்கத்தொகை வழங்கிய எம்எல்ஏ

image

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (35), மலையேற்ற வீராங்கனையான இவர் இதுவரை ஐந்து கண்டங்களில் உள்ள உயரமான மலைச் சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக நவம்பர் மாதம் மற்றொரு சிகரத்தில் ஏற இருக்கிறார். அவருக்கு செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் இன்று ஊக்கத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News

News November 19, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

செங்கல்பட்டு காவல் துறை எச்சரிக்கை!

image

செங்கல்பட்டு காவல் துறை இன்று (நவம்பர் 18) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத ரசீது லிங்க்களை போலியாக அனுப்பி பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு செங்கல்பட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உண்மையான அபராத ரசீது லிங்க்கள் .gov.in முடிவடையும் அரசின் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

News November 18, 2025

செங்கை: உங்களிடம் செல்போன் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்பட்டு, பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து, செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர்!

error: Content is protected !!