News April 24, 2025
மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு, நேற்று காலை தமிழக அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் . பஸ்சில் 23 பயணியர் இருந்தனர். குமுளி மலைப்பாதையில் உள்ள மாதா கோவில் வளைவுக்கு முன் பஸ் பிரேக் பிடிக்காததால், ராட்சத பைப்புக்கு மேல் அமைக்கப்பட்ட பால கைப்பிடிச்சுவரில் மோதி பஸ் நின்றது.இதனால், 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 23 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Similar News
News April 24, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 24) நீர்மட்டம்: வைகை அணை: 56.14 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 100 க.அடி, திறப்பு: 100 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 100.20 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.40 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
News April 24, 2025
தேனியில் இலவச ஆரி எம்பிராய்டரி பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை, வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles ) பயிற்சி வழங்க உள்ளது. 04546-260995 என்ற தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடைய தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
தேனி: விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் www.sdat.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7.8.9.11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மே.5 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்துள்ளார்.