News April 14, 2024

மலைக்கோட்டையில் சித்திரை திருவிழா

image

திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை சாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு வந்தார். அதன் பின்பு தீப ஆரத்திகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Similar News

News November 7, 2025

திருச்சி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

திருச்சி : திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

1. திருச்சி மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

திருச்சி: ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 9 ஆம் தேதி இரவு திருச்சி வருகை தர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி 09.11.2025 முதல் 10.11.2025 நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!