News January 1, 2025
மலிவான விலைகளில் கோழி குஞ்சுகள் பெற அழைப்பு

திருச்சியிலுள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் ஜன.21 அன்று, ஒரு நாள் வயதுடைய கோழி குஞ்சுகள் விற்பனைக்கு வரவுள்ளன. கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் இன்று முதல் திருச்சி கோழி பண்ணை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் உரிய விலையை செலுத்தி முன்பதிவு செய்து கோழி குஞ்சுகளை பெறலாமென தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
திருச்சி: வாகனம் ஏலம் அறிவிப்பு – கலெக்டர்

திருச்சி மகளிர் சிறையில் பயன்படுத்தப்பட்ட டெம்போ ட்ராவலர் வேன் வரும் டிச.11-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் டிச.9-ம் தேதி வாகனத்தை பார்வையிட்டு கொள்ளலாம். ஏலம் நடைபெறும் தினத்தன்று ரூ.5000 முன்பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்த பின் உரிய தொகையுடன், வரிகளை செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய விஏஓ-க்கு சிறை!

முசிறி, கீழத்தெருவைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் என்பவர் ரூ.700 லஞ்சம் பெற்ற வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் உறுதிசெய்யப்பட்டதால் விஏஓ செல்வராஜுக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
News November 26, 2025
திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்டில் பரிதாப பலி

அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த வெங்கடேசன் (24) என்பவர் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகளை முடிப்பதற்காக நேற்று வேலைக்கு சென்ற வெங்கடேசன் எலக்ட்ரிக்கல் பணியை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


