News April 14, 2025
மற்றவர்களுக்கு சிம்கார்டு வாங்கி தராதீர்கள் – போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி இணையவழி போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்ட செய்தியில், இணையவழி குற்றங்களில் 85 சதவீதம் ஆன்லைனில் பணம் இழப்பது சம்பந்தமாக நடக்கிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள், வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டு வாங்கி கொடுப்பவர்களை சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பித்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் யாரும் முன்பின் தெரியாதவர்களுக்கு சிம் கார்டு வாங்கி தர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள தனியார் ஹோட்டல்களுக்கு ஈ மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை நிலை ஆளுநர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
News April 19, 2025
புதுச்சேரி: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

புதுவை மக்களே உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை, செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். ரிப்போர்ட்டராக பதிவு செய்ய <
News April 19, 2025
புதுச்சேரி: தனியார் வங்கியின் லிங்க் மூலம் மோசடி

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது வாட்ஸ் ஆப்பில் தனியார் வங்கியின் லிங்க் ஒன்று வந்துள்ளது. வெங்கடேசன் அந்த லிங்கை கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.23 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.