News March 30, 2025
மருத்துவ விழிப்புணர்வு முகாம்-கலெக்டர் தகவல்

தேனி மாவட்டத்தில் புற்றுநோய்,பக்கவாதநோய்,தொழுநோய்,காசநோய்,கண்பார்வை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் ஏப்.9 மற்றும் 16ந் தேதிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்தார்.
Similar News
News April 4, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் 03.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 3, 2025
அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி – ஆட்சியர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் ரஞ்சீத் சிங் தெரிவித்துள்ளார்.
News April 3, 2025
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கோயில்

தேனியில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் கண்ணகி கோயில் எங்கு உள்ளது தெரியுமா? தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். இது கடல் மட்ட அளவிலிருந்து சுமார் 5000 கி.மீ உயரத்தில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே இக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி. அன்று இங்கு கேரளா மற்றும் தமிழக மக்கள் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்வர்.