News February 16, 2025
மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
Similar News
News September 19, 2025
ராணிப்பேட்டை: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
News September 19, 2025
ராணிப்பேட்டை: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News September 19, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி விவரங்கள்

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையால் 18.9.25 இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.