News March 5, 2025
மருத்துவமனை கட்டுவதாக மோசடி

அருப்புக்கோட்டையை சேர்ந்த பானுமதி என்பவரிடம் மதுரை சிந்தாமணியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டி வருவதாகவும், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு 36% முதல் வட்டி தருவதாகவும், இவர்களது குடும்பத்தினருக்கு அனைத்து சிகிச்சைகளும் இலவசம் என கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதில் மேலும் சிலர் பணம் செலுத்தியுள்ளதால் அதில் பணம் கிடைக்காதவர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.
Similar News
News December 4, 2025
விருதுநகர்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04562 -252723 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News December 4, 2025
ஸ்ரீவில்லிபுத்தூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (25). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் தங்கை முறை உள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் அம்மாவுக்கும், மணிகண்டனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
விருதுநகர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்படும். இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இங்கு <


