News October 25, 2024
மருது சகோதரர்களின் நினைவு மண்டபத்தில் எம்.எல்.ஏ மரியாதை

விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி நேற்று (24.10.2024) அவர்களின் திருப்பத்தூரில் உள்ள அவர்களின் நினைவு மண்டபத்தில் ஶ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து, மலர் மரியாதை செய்தார். நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Similar News
News September 18, 2025
தமமுக காஞ்சி நிர்வாகி மறைவு – ஜான் பாண்டியன் இரங்கல்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரியாஸ் மாலிக் மறைவு குறித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ரியாஸ் மாலிக் மறைவு கழகத்திற்கு பேரிழப்பாகும். அவரது ஆன்மா இறைவனடி சேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டுள்ளார்.
News September 18, 2025
பாஜக obc அணியின் மாநில நிர்வாகிகள் அறிவிப்பு

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின் படி obc அணிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த முன்னாள் மாவட்டத் துணைத் தலைவரான A.செந்தில்குமார் என்பவரை obc அணியின் மாநில துணை தலைவராக நியமித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News September 18, 2025
காஞ்சிபுரம்: இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கைத்தண்டலம் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் விவசாயிகளுக்கு தேக்கு, மா, செம்மரம் போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள், கோயில்களுக்கு நாவல், புளிய மரம், புங்கன் மரம், ஆலமரம் போன்றவையும் வழங்கப்படுகின்றன. விரும்புவோர் ஆதார், பட்டா, சிட்டா,அடங்க போன்ற ஆவணங்களுடன் வனசரக அலுவலகத்தை(95977 49906, 91598 06994) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க