News April 13, 2025
மருதமலை முருகன் கோயில்!

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!
Similar News
News November 26, 2025
கோவை இரவு ரோந்து காவலர் விபரம்!

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (நவ.26) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
News November 26, 2025
கோவையில் OPS -க்கு ஆயுர்வேத சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார். அப்போது, பேசிய ஓபிஎஸ் பேச வேண்டியதை எல்லாம் நேற்றே பேசிவிட்டேன். கோவையில் 6 நாள் தங்கி சிகிச்சைப்பெற உள்ளேன் என்றார். பின், அவர் கணபதிக்கு சென்று அங்குள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு நீராவி குளியல், மசாஜ் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. அவர் அங்கு 6 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார்.
News November 26, 2025
கோவை வரும் துணை முதல்வர்

தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (26-11-2025) பிற்பகல் 02:30 மணிக்கு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, கோவை விமான நிலையம் வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு, அவருக்கு கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே இதில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


