News March 21, 2025

மருதமலையில் ஏப்.4ல் கும்பாபிஷேகம்

image

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் மகேஷ்குமார் நேற்று கூறியதாவது: கோவை மருதமலை கோவிலில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலைகள் அமைக்கும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது என்றார்.

Similar News

News March 22, 2025

துணை முதல்வர் கோவை பயணம் ஒத்திவைப்பு

image

கோவை மாவட்டத்தில் நாளை (23-03-2025) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், தற்பொழுது தவிர்க்க இயலாத காரணங்களால், இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (22.03.2025) இரவு ரோந்து பணிக்கு, காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 22, 2025

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்

image

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது மார்ச் 30ம் தேதி இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

error: Content is protected !!