News August 10, 2024
மரவள்ளி கிழங்கு குறித்து இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
அடடே! நாமக்கல்லுக்கு கிடைத்த பெருமை!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டில் ஐந்து பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. அதில் நாமக்கல் சோப்புக்கல் சமையல் பாத்திரங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சோப்புக்கல் பாத்திரங்கள் வலிமையாகவும், நீடித்த உழைப்புடனும் இருப்பதால், குறைந்தபட்ச பராமரிப்புடன் கூட பல ஆண்டுகள் உடையாமல் இருக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 74 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உள்ளன.
News December 5, 2025
பரமத்தி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

பரமத்தி அருகே வில்லிபாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்(48) என்பவர் விவசாயி. அவரது மனைவி நர்மதாவுடன் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் மனவருத்தம் அடைந்த அவர், சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


