News May 15, 2024
மரம் நடும் பணியினை துவக்கி வைத்த கலெக்டர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஹள்ளி ஊராட்சி, ரங்காபுரம் கிராமத்தில் மரம் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று துவக்கி வைத்து நட்டு வைத்த மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றினார். உடன் வட்டாட்சியர் சுகுமார் உட்பட தொடர்புடைய
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 22, 2025
தருமபுரி: g-pay பயனாளர்களே இந்த Trick தெரிஞ்சிக்கோங்க!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தருமபுரி: கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7ஆண்டு சிறை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால், வெங்கட்டம்மாள் என்ற பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற விவசாயி கிருஷ்ணனுக்கு (50), 7ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3,000 அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மோனிகா இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2021-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
News November 22, 2025
தருமபுரி: போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (நவம்பர்-22) சுகாதார ஆய்வாளர்களுக்கு போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு -1 காலை 10:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வில் உடற்கூறியில், பூச்சியில், ஒட்டுண்ணியியல், நுண்ணுயிரியல், பொது சுகாதார சட்டம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பிரிவுகள் இடம் பெற உள்ளது. எனவே மாணவர்கள் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தல்.


